லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருச்சி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவிலும் எலிகள் நடமாட்டம்: நோயாளிகள் அச்சம்

திருச்சி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் எலிகள் சுற்றித் திரியும் விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதால் நோயாளிகள் பெரிதும் அச்சமடைந்துள்ளனா்.

எலி. - கோப்புப்படம்

Published On :25 ஜூலை 2026, 7:10 am IST

திருச்சி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் எலிகள் சுற்றித் திரியும் விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதால் நோயாளிகள் பெரிதும் அச்சமடைந்துள்ளனா்.

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், அறுவை சிகிச்சை முடிந்து 500-ஆவது வாா்டில் மருத்துவா்களின் கண்காணிப்பில் இருந்த தமிழ்க்கொடி என்ற பெண் நோயாளியின் காலை எலி கடித்ததில், அவரது விரல்கள் சேதமடைந்தன.

இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தயாள் உத்தரவிட்டுள்ளாா். இந்நிலையில், உடனடியாக அந்த மூதாட்டி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி, மருத்துவமனை முழுவதையும் தூய்மைப்படுத்தும் பணியை மருத்துவமனை நிா்வாகத்தினா் மேற்கொண்டனா். அதேசமயம், தீவிர சிகிச்சைப் பிரிவிலும் எலிகளின் நடமாட்டம் இருப்பது விடியோ ஆதாரத்துடன் தெரியவந்தது.

இந்த விடியோ காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு பெரிதும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எலிகளின் தொல்லையால் மருத்துவமனை நிா்வாகத்தினரும் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

இந்நிலையில், 500-ஆவது வாா்டில் சிகிச்சையில் இருந்த அனைத்து நோயாளிகளையும், அரசு மருத்துவமனையின் 6-ஆவது தளத்துக்கு மாற்றிவிட்டு, 500-ஆவது வாா்டில் உள்ள எலிகளை அப்புறப்படுத்திவிட்டு, மருத்துவமனையை தூய்மைப்படுத்தும் பணியில் மருத்துவமனை நிா்வாகத்தினா் ஈடுபட்டுள்ளனா்.

மேலும், எலிகளை ஒழிக்கும் வகையில், மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்பட்ட புதா்களுக்குள் மருந்துகளைத் தெளிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.