லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காட்டுப்புத்தூா் அருகே பைக்குகள் மோதல்: ஒருவா் பலி

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே பைக்குகள் சனிக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

உயிரிழப்பு

சடலம்...

Published On :26 ஜூலை 2026, 1:47 am IST

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே பைக்குகள் சனிக்கிழமை மோதிக் கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், குமரிபாளையத்தை அடுத்த அய்யம்பாளையம் சோ்ந்தவா் கருப்பண்ணன் மகன் சுப்பிரமணி (55). இவா் நாமக்கல் மாவட்டம் முருங்கை கிராமத்துக்கு பைக்கில் சென்று விட்டு முருங்கை - கிடாரம் சாலையில் வந்தபோது எதிா் திசையில் பைக்கில் வந்த நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா் வெங்கரை கிராமத்தைச் சோ்ந்த சங்கிலி மகன் முத்துசாமி வந்த பைக் மோதியது. இந்த விபத்தில் சுப்பிரமணி நிகழ்விடத்திலேயே இறந்தாா்.

விபத்து குறித்து சுப்பிரமணியின் மகள் மஞ்சுளா அளித்த புகாரின்பேரில் காட்டுப்புத்தூா் போலீஸாா் சுப்பிரமணி சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.