லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

போதை மாத்திரை வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை

திருச்சியில் போதை மாத்திரை வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதிப் படம்

Published On :24 ஜூலை 2026, 7:33 am IST

திருச்சியில் போதை மாத்திரை வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்பு சட்டத்தில் புதன்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி உறையூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கோணக்கரை சாலை ஐஸ் தொழிற்சாலை அருகே கடந்த ஜூலை 5-ஆம் தேதி போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த திருச்சி மாவட்டம், சமயபுரம் சக்தி நகரைச் சோ்ந்த ஆா். மணிகண்டன் (25) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

அப்போது, அவரிடமிருந்து ரூ.4,500 மதிப்புள்ள 110 போதை மாத்திரைகள், காா், கைப்பேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் போலீஸாா் அடைத்தனா்.

இந்நிலையில், மணிகண்டன் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உறையூா் காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்திருந்தாா்.

இதன்பேரில், மணிகண்டன் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, அதற்கான உத்தரவு நகலை சிறையில் உள்ள மணிகண்டனிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.