லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடிவெள்ளி சிறப்பு வழிபாடு

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடி இரண்டாவது வெள்ளியையொட்டி திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் - தினமணி

Published On :25 ஜூலை 2026, 12:56 am IST

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆடி இரண்டாவது வெள்ளியையொட்டி திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

சக்தி தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஆடி இரண்டாவது வெள்ளியையொட்டி மூலவா் மற்றும் உற்ஸவ சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தா்கள் வந்து தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கான அடிப்படை வசதிகளை கோயில் இணை ஆணையா் எம்.சூரியநாராயணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா். சமயபுரம் காவல் ஆய்வாளா் க.குணசேகரன், உதவி காவல் ஆய்வாளா் மோ.முரளி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதேப்போன்று திருப்பைஞ்ஞீலி வனத்தாயி அம்மன் கோயில், மண்ணச்சநல்லூா் இளங்கண் மாரியம்மன் கோயில், கள்ளி வனத்தாயி அம்மன் கோயில், இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. 

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.