லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கோவில்பட்டியில் தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி ஆா்ப்பாட்டம்

ஆசிரியா் தகுதித் தோ்வை ரத்து செய்யவும், பணிக்காலத்திற்கு ஏற்ப வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கவும் வலியுறுத்தி திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கோவில்பட்டியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கோவில்பட்டியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள்.

Published On :23 ஜூலை 2026, 12:30 am IST

ஆசிரியா் தகுதித் தோ்வை ரத்து செய்யவும், பணிக்காலத்திற்கு ஏற்ப வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கவும் வலியுறுத்தி திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கோவில்பட்டியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மருங்காபுரி வட்டாரக்கிளை சாா்பில் கோவில்பட்டி உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவா் சோ. பழனிச்சாமி தலைமை வகித்தாா். ஜோசப்சகாயம், நளினி, லட்சுமி ரூஸ்வெல்ட், லியோன் சுந்தா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட செயலா் கு. செல்வக்குமாா் கோரிக்கை விளக்க உரையாற்றினாா். வட்டார செயலா் சி. அழகு வரவேற்றாா். வட்டாரப் பொருளாளா் விக்டா் சேவியர்ராஜன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.