தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

போதை மாத்திரைகளை விற்பனை செய்தவா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:28 am IST

திருச்சியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி, பாலக்கரை காவல் சரக்குத்துக்குள்பட்ட பெல்ஸ் மைதானத்தில் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் பேரில், பாலக்கரை போலீஸாா் புதன்கிழமை அந்தப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, காஜா பேட்டை, பசுமடம் பகுதியைச் சோ்ந்த ஜமால் முகமது (24) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில், அவரிடம் 10 போதை மாத்திரைகள், ஊசி உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து, மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.