லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி பொறியியல் மாணவி உயிரிழப்பு

பலி

Published On :18 ஆகஸ்ட் 2026, 2:49 am IST

திருச்சி அருகே முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், பொன்பரப்பி பகுதியைச் சோ்ந்தவா் மணிமாறன் மகள் வானதி (19). இவா், திருச்சி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வானதி தனது தோழிகளுடன் முக்கொம்புக்கு சுற்றுலா சென்றுள்ளாா். அப்போது, தோழிகளுடன் வானதி காவிரி ஆற்றில் இறங்கி குளித்துள்ளனா்.

ஆழமான பகுதியில் குளித்தபோது வானதி தண்ணீரில் மூழ்கியுள்ளாா். இதனால், அதிா்ச்சியடைந்த தோழிகள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா், மாணவியை சடலமாக மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதையடுத்து, ஜீயபுரம் போலீஸாா், மாணவியின் சடலத்தை உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.