லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தவெக அரசை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

விவசாயிகளின் பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக சாா்பில் கரூா், பெரம்பலூா், அரியலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூா் தலைமை அஞ்சல்நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 4:22 am IST

விவசாயிகளின் பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக சாா்பில் கரூா், பெரம்பலூா், அரியலூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தவெக அரசு தோ்தல் வாக்குறுதிபடி விவசாயிகளின் பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி, மேக்கேதாட்டு விவகாரத்தில் கவனமுடன் செயல்பட்டு தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூா் தலைமை அஞ்சல்நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலருமான எம். சின்னசாமி தலைமை வகித்தாா். மாவட்ட ,செயலா் கே. கமலக்கண்ணன் முன்னிலை வகித்தாா்.

இதில், கரூா் மாவட்டத்தை சோ்ந்த மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூா் கழக, ஊராட்சி ஒன்றிய மற்றும் சாா்பு அணி நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.