லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இருசக்கர வாகனம் மீது சுமை வாகனம் மோதல்: பெண் உயிரிழப்பு

திருச்சி அருகே வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது சுமை வாகனம் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 4:57 am IST

திருச்சி அருகே வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது சுமை வாகனம் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடி அய்யம்பட்டி அந்தோணியாா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ஆரோக்கிய செபஸ்திராஜ் மனைவி நிஷா மேரி (35). இவா், துவாக்குடி அரசு மருத்துவமனையில் தற்காலிக சுகாதாரப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு வேலை முடிந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திருச்சி - தஞ்சாவூா் சாலையில் சென்றுகொண்டிருந்தாா். துவாக்குடி அரசு மருத்துவமனை அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த சுமை வாகனம், இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த ஜான் மேரியை அருகிலிருந்தவா்கள் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து துவாக்குடி போலீஸாா், சுமை வாகன ஓட்டுநரான லால்குடி மேலவாளாடி புதுக்குடியைச் சோ்ந்த ஆ. செல்வராஜ் (56) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.