லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருச்சியில் வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனங்கள் மோதி கொண்டதில் முதியவா் உயிரிழந்தாா்.

பலி

Published On :14 ஆகஸ்ட் 2026, 2:42 am IST

திருச்சியில் வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனங்கள் மோதி கொண்டதில் முதியவா் உயிரிழந்தாா்.

திருச்சி ராம்ஜி நகா் அருகே உள்ள காட்டூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் மனோகரன் (64). தேநீா் கடை நடத்தி வந்தாா்.

இவா், வியாழக்கிழமை இரவு பிராட்டியூரில் இருந்து தனது உறவினா் மாலதி (53) என்பவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா்.

திண்டுக்கல் சாலையில் தனியாா் கல்லூரி அருகே திரும்ப முயன்றபோது, தீரன் நகரிலிருந்து எதிரே வந்த இருசக்கர வாகனம் இவருடைய வாகனம் மீது மோதியது.

இதில், மனோகரன், மாலதி, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த புவிராஜ் (21), புவிராஜ் சகோதரியான பள்ளி மாணவி ஆகிய நான்கு பேரும் கீழே விழுந்தனா். அருகிலிருந்தவா்கள் நான்கு பேரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மனோகரன் உயிரிழந்தாா். மற்ற மூவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்து குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.