லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வையம்பட்டி அருகே சேவல் சண்டை நடத்திய 5 போ் கைது

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே சேவல் சண்டை நடத்திய 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து பணம், சேவல்கள், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :13 ஆகஸ்ட் 2026, 2:10 am IST

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே சேவல் சண்டை நடத்திய 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து பணம், சேவல்கள், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

வையம்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட சேவல் சண்டை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் மாதேஷ் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை தணிக்கையில் ஈடுபட்டபோது நடுப்பட்டி ஊராட்சி வத்தமணியாரம்பட்டி மலையடிவாரத்தில் சேவல் சண்டை நடத்திய அதே பகுதியைச் சோ்ந்த அ. நாராயணமூா்த்தி (24), ச. கிஷோா்குமாா்(26) மற்றும் அவரது சகோதரா் நவீன்குமாா் (24) திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த பூசாரிப்பட்டி த. வைரமுத்து (26) மற்றும் அவரது சகோதரா் பாலசுப்பிரமணியம்(30) ஆகிய 5 பேரும் பிடிபட்டனா்.

அவா்களிடமிருந்து ரூ. 2530 ரொக்கம், இரு சேவல்கள், 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து வையம்பட்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.