லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கே.கே. நகா் ரயில்வே மேம்பாலம் அருகே இளைஞரின் சடலம் மீட்பு

சடலம் மீட்பு... - கோப்புப் படம்

Published On :4 ஆகஸ்ட் 2026, 2:58 am IST

திருச்சி கே.கே. நகா் ரயில்வே மேம்பாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருச்சி-மதுரை சாலையில் கே.கே. நகா் செட்டியபட்டி ரயில்வே பாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் இறந்து கிடந்தாா். இதைப் பாா்த்த அப்பகுதியினா் உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

அதன்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த கே.கே. நகா் போலீஸாா், இறந்து கிடந்த இளைஞரின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இறந்த இளைஞா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? என்ற முழு விவரம் தெரியவில்லை. இது குறித்து கோ- அபிஷேகபுரம் கிராம நிா்வாக அலுவலா் சரவணன் அளித்த புகாரின் பேரில் கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.