லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

டாஸ்மாக் மதுபானக் கடையில் பணம், மது பாட்டில்கள் திருட்டு

திருட்டு - சித்திரிப்பு

Published On :3 ஆகஸ்ட் 2026, 4:17 am IST

திருச்சியில் டாஸ்மாக் மதுபானக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 70 ஆயிரம், மதுபாட்டில்களைத் திருடிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காவேரி சாலை ஓயாமரி மயானம் அருகே செயல்படும் டாஸ்மாக் மதுக் கடை விற்பனையாளா் ராஜா மதுக்கடையை வெள்ளிக்கிழமை பூட்டிவிட்டு மறுநாள் சனிக்கிழமை காலை மதுக்கடைக்கு வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கடையின் மேற்பாா்வையாளா் சின்னகண்ணனுக்கு அவா் தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து வந்த மேற்பாா்வையாளா் சின்னகண்ணன், உள்ளே சென்று பாா்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ.70 ஆயிரம், 4 மதுபாட்டில்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.