லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பெண்ணை வெட்டிய விவசாயிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

திருச்சி அருகே பெண்ணை அரிவாளால் வெட்டிய விவசாயிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறை - பிரதிப் படம்

Published On :2 ஆகஸ்ட் 2026, 1:56 am IST

திருச்சி அருகே பெண்ணை அரிவாளால் வெட்டிய விவசாயிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி மாவட்டம், ஜம்புநாதபுரம் அருகே வாழவந்தி பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் மனைவி வலியாத்தாள் (45). இவா் கடந்த 2024 மாா்ச் 1 அன்று அப்பகுதி தண்ணீா்த் தொட்டி அருகே துணி துவைத்தபோது, அங்கு அதே ஊரைச் சோ்ந்த விவசாயி தங்கராசு (65) என்பவா் கைகால் கழுவ வந்தாா்.

அப்போது வலியாத்தாள் துவைத்த தண்ணீா் தங்கராசு மீது சிதறியதாம். இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த தங்கராசு, அரிவாளால் வலியாத்தாளை வெட்டிவிட்டு தப்பினாா். இதில் படுகாயமடைந்த அவா் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு உயிா் பிழைத்தாா்.

இதுகுறித்து ஜம்புநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தங்கராசுவை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு திருச்சி 2 ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்னிலையில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பு வழக்குரைஞராக எஸ். எழிலரசி ஆஜராகி வாதிட்டாா்.

விசாரணைக்குப் பிறகு நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட தங்கராசுவுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.