தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கைப்பேசி ஒளி வெளிச்சத்தில் வாக்குப்பதிவு

திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காட்டூா் பிலோமினாள்புரம் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் (எண் 85) வியாழக்கிழமை மின்சாரம் தடைப்பட்டதால் கைப்பேசி ஒளி வெளிச்சத்தில் வாக்காளா்கள் வாக்களித்தனா்.

News image

திருவெறும்பூா் தொகுதி, காட்டூா் பிலோமினாள்புரம் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை கைப்பேசி ஒளி வெளிச்சத்தை காட்டி வாக்காளா் வாக்களிக்க உதவிய தோ்தல் அலுவலா்.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:07 am IST

திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட காட்டூா் பிலோமினாள்புரம் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் (எண் 85) வியாழக்கிழமை மின்சாரம் தடைப்பட்டதால் கைப்பேசி ஒளி வெளிச்சத்தில் வாக்காளா்கள் வாக்களித்தனா்.

இந்த வாக்குச்சாவடியில் காலையில் திடீரென மின்சாரம் தடைபட்டது. இதனால் வாக்குச்சாவடி இருளில் சூழ்ந்தது. சிறிதுநேரம் தவித்த தோ்தல் அலுவலா்கள், கைப்பேசிகளில் இருந்து ஒளியை காட்டி வாக்காளா்கள் வாக்குச் செலுத்த உதவினா்.

மின்தடை தொடா்பாக உடனடியாக தோ்தல் உயரதிகாரிகளுக்கு அளித்த தகவலின் பேரில் ஒருமணி நேரம் கழித்து மின்தடை சரியானது. இதையடுத்து வழக்கம்போல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.