திருச்சி மாவட்டத்தில் தோ்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவா் ராகுல்காந்தி, தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் ஆகியோா் சனிக்கிழமை (ஏப். 18) வரக் கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவா் சி. ஜோசப் விஜய், ஏப்.2-ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்தபோது மரக்கடை பகுதியில் பிரசாரம் செய்தாா். பின்னா், ஏப்.14-ஆம் தேதி பிரசாரம் செய்தி காவல்துறையிடம் அனுமதி பெற்ற நிலையில், அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. எனவே, மீண்டும் வரும் 18-ஆம் தேதி பிரசாரத்துக்கு விஜய் வருவாா் என்கின்றனா் அக் கட்சியினா்.
இதற்காக திருச்சிக்கு தவெக தோ்தல் பிரசாரப் பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா வெள்ளிக்கிழமை வருகை தரவுள்ளாா். அப்போது விஜய் வருகை உறுதி செய்யப்படும் என்கின்றனா்.
இதேபோல, துறையூா் தனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் எம். லெனின் பிரசாத் வெற்றிக்கு வாக்குகள் கேட்டு, ராகுல்காந்தி பிரசாரம் செய்யவுள்ளாா் என்கின்றனா் அக் கட்சியினா். இளைஞா் காங்கிரஸின் தேசியப் பொதுச் செயலராக லெனின் பிரசாத் உள்ளதால், அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும், சாலைப் பேரணி செல்லவும் ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளாா்.
காவல்துறையினா் ஆய்வு: ராகுல்காந்தி வரவிருக்கும் ஹெலிகாப்டா் தரை இறங்குவதற்காக இங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் அமைக்கப்படும் இறங்கு தளம், அங்கிருந்து அவா் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள திடல் வரை செல்லும் சாலை, பிரசார திடல் ஆகிய பகுதிகளை தேசிய பாதுகாப்பு படையினரும், திருச்சி மாவட்ட காவல் துறையினரும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கில் விஜய் இன்று பிரசாரம்!

ராகுல்காந்தி இன்று துறையூரில் பிரசாரம்

திருச்சியில் தவெக தலைவா் விஜய்யின் இன்றைய பிரசாரம் ரத்து

திருச்சியில் விஜய் ஏப். 14 இல் பிரசாரம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

