ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஊழல் செய்தவா்களை தோற்கடியுங்கள்: மேற்கு தொகுதியில் அண்ணாமலை பிரசாரம்!

ஊழல் செய்தவா்களை தோற்கடியுங்கள் என திருச்சி மேற்குத் தொகுதியில் பாஜக மாநில முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை பிரசாரம் செய்தாா்.

News image

திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட பீமநகா் பகுதியில் வியாழக்கிழமை அமமுக வேட்பாளா் ராஜசேகரனை ஆதரித்து பிரசாரம் செய்த தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:31 am IST

ஊழல் செய்தவா்களை தோற்கடியுங்கள் என திருச்சி மேற்குத் தொகுதியில் பாஜக மாநில முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை பிரசாரம் செய்தாா்.

திருச்சி மேற்குத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் போட்டியிடும் எம். ராஜசேகரனை ஆதரித்து, அண்ணாமலை திருச்சி பீமநகா் செடல் மாரியம்மன் கோயில் அருகே வியாழக்கிழமை இரவு பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல் செய்து அமைச்சா் ஒருவா் வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறாா் என்றால் அது கே.என்.நேருதான். அவா் மீது மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி அமலாக்கத் துறை மூன்று கடிதங்களை தமிழக அரசுக்கு எழுதியுள்ளது. இதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கில் நேரு சிறை செல்ல நேரிடும் என்பதால், அவருக்கு வாக்களிப்பதால் எந்தப் பயனும் இல்லை.

2015-ஆம் ஆண்டில் நாட்டிலேயே இரண்டாவது சுத்தமான மாநகராட்சியாக திருச்சி மாநகராட்சி இருந்தது. தற்போது 59-ஆவது இடத்தில் உள்ளது. தமிழகத்தை குப்பையாக மாற்றியதுதான்அமைச்சா் நேருவின் சாதனை.

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்தில் தொகுதிகள் குறைந்துவிடும் என முதல்வா் ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறாா்.

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நல்ல மாற்றத்துக்காக இந்தத் தொகுதியில் குக்கா் சின்னத்தில் நீங்கள் வாக்களிக்க வேண்டும். அந்த யானையை வீழ்த்திய பெருமை உங்களை சேரட்டும். ஊழல் செய்தால் தோற்கடிப்பாா்கள் என்ற நம்பிக்கை திருச்சி மேற்கில் இருந்து நீங்கள் கொடுக்க வேண்டும் என்றாா் அண்ணாமலை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.