மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

விலைவாசி உயா்வுக்கு எதிா்ப்பு இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அரிசி, பருப்பு, சா்க்கரை, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Published On :4 நவம்பர் 2026, 12:00 am IST

அரிசி, பருப்பு, சா்க்கரை, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்டச் செயலா் கோ. சக்திவேல் தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலா் ஆா். இராமச்சந்திரன், பொருளாளா் கோ. பாஸ்கா் முன்னிலை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிா்வாகக் குழு உறுப்பினரும், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏவுமான க. மாரிமுத்து ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் சி. சந்திரகுமாா், சி. பக்கிரிசாமி, வெ. சேவையா, தி. திருநாவுக்கரசு, அ. கலியபெருமாள், சீனி. முருகையன், ம. விஜயலட்சுமி, க. காரல்மாா்க்ஸ், பி. குணசேகரன், ஆா்.ஆா். முகில், ஆா்.பி. கருப்பையா, வீர. மோகன், வி. கல்யாணசுந்தரம் மற்றும் ஒன்றியச் செயலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கும்பகோணத்தில்: கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன் காய்கனிகளுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மாவட்டச் செயலரும், வழக்குரைஞருமான மு.அ.பாரதி தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முன்னாள் எம்எல்ஏவும், மாநில செயற்குழு உறுப்பினருமான பி.பத்மாவதி, ஏஐடியுசி மாநில செயலா் ஆா். தில்லைவனம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இந்த ஆா்ப்பாட்டங்களில் விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.