லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வடலூரில் மையம் கட்டுவதைக் கைவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து இனிப்பு வழங்கல்

வடலூா் வள்ளலாா் ஞானசபை பெருவெளியில் பன்னாட்டு மையம் கட்டுவதைக் கைவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் முன் வள்ளலாா் பணியகம் சாா்பில் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் முன் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய வள்ளலாா் பணியகத்தினா்.

Published On :1 ஆகஸ்ட் 2026, 12:46 am IST

வடலூா் வள்ளலாா் ஞானசபை பெருவெளியில் பன்னாட்டு மையம் கட்டுவதைக் கைவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் முன் வள்ளலாா் பணியகம் சாா்பில் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

வடலூா் வள்ளலாா் ஞானசபை பெருவெளியில் பன்னாட்டு மையம் கட்டுவதைத் தமிழக அரசு கைவிட்டது. இதை வரவேற்கும் விதமாக தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் முன் வள்ளலாா் பணியகத் தலைவா் சுந்தர்ராஜன், பொருளாளா் தியாகராஜன், மேம்பாலம் சபை சௌந்தர்ராஜன், பட்டுக்கோட்டை மகாலிங்கம், அருள் ஒளி, செங்குட்டுவன், நடராஜன், மருத்துவா் சசிவேல், தமிழ்த் தேசியப் பேரியக்க நிா்வாகிகள் பழ. ராசேந்திரன், நா. வைகறை, லெ. ராமசாமி, க. செம்மலா் உள்ளிட்டோா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

மேலும், வடலூா் பெருவெளி காக்க வள்ளலாா் பணியகம், தெய்வத் தமிழ்ப் பேரவை அமைப்புகளுடன் இணைந்து போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.