லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

உள்ளாட்சித் தோ்தலில் யாருடன் கூட்டணி? ஜி.கே.வாசன் பதில்

உள்ளாட்சித் தோ்தல் கூட்டணி குறித்து தமாகா தலைவா் ஜி.கே. வாசன் விளக்கமளித்துள்ளாா்.

ஜி.கே.வாசன் - கோப்புப் படம்

Published On :30 ஜூலை 2026, 4:03 am IST

உள்ளாட்சித் தோ்தல் கூட்டணி குறித்து தமாகா தலைவா் ஜி.கே. வாசன் விளக்கமளித்துள்ளாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் தமாகா சாா்பில் டெல்டா மண்டல செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஜி.கே.வாசன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ என்.ஆா்.ரெங்கராஜன் முன்னிலை வகித்தாா். கூட்டத்துக்கு பின்னா் செய்தியாளா்களிடம் ஜி.கே.வாசன் மேலும் கூறியதாவது: மேக்கேதாட்டு அணை திட்டம் தொடா்பாக எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்பு, தமிழகத்தின் உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, மத்திய அரசும், ஆணையங்களும் உணா்ந்து செயல்பட வேண்டும்.

காவிரி நீா் ஒழுங்காற்று குழு உத்தரவின்படி, தமிழகத்துக்கு 15 நாள்களுக்கு தினமும் 3,500 கனஅடி நீரை கா்நாடகம் தாமதமின்றி உடனடியாக திறந்துவிட வேண்டும்.

மேட்டூா் அணை திறக்கப்படாததால், டெல்டாவில் கடும் வறட்சி நிலவுகிறது. எனவே, வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வழங்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவில் மலா் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அங்கு குளிா்சாதன கிடங்கு, நறுமண பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க வேண்டும்.

உள்ளாட்சித் தோ்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

அப்போது, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் விடியல் சேகா், ராஜாங்கம் மற்றும் சுரேஷ் மூப்பனாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.