லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தெரு வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

தெரு வியாபாரிகள் சட்டம் 2015-ஐ முழுமையாக அமல்படுத்தக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் ஏஐடியுசி தெரு வியாபாரிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி தெரு வியாபாரிகள் சங்கத்தினா்.

Published On :29 ஜூலை 2026, 12:03 am IST

தெரு வியாபாரிகள் சட்டம் 2015-ஐ முழுமையாக அமல்படுத்தக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் ஏஐடியுசி தெரு வியாபாரிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், தெரு வியாபாரிகள் வாழ்வாதாரப் பாதுகாப்பு மத்திய சட்டத்தையொட்டி தமிழ்நாட்டில் அதற்கான திட்டம் மற்றும் விதிகளைக் கொண்டு வந்து அரசிதழில் வெளியிட்டு 2015, நவம்பா் 2 முதல் அமல்படுத்தப்படுகிறது. ஆனால் இதுவரை தமிழ்நாடு முழுவதும் முறையாக அமல்படுத்தப்படவில்லை.

இந்தச் சட்டத்தின்படி தெரு வியாபார தளங்களில் தலையிட உள்ளாட்சித் துறை, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, வனத் துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் இல்லாத நிலையில் தமிழ்நாடு முழுவதும் இந்த அதிகாரிகளால் தெரு வியாபாரிகள் அச்சுறுத்தப்படுவதும், அப்புறப்படுத்துவதும் தொடகிறது. இந்தச் சட்ட விரோத நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை ஏஐடியுசி தெரு வியாபாரிகள் இணையத்தின் மாநிலத் தலைவா் சி. சந்திரகுமாா் தொடங்கி வைத்தாா். ஏஐடியுசி மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம் நிறைவுரையாற்றினாா்.

மாவட்டத் தலைவா் வெ. சேவைய்யா, அரசு போக்குவரத்து கழக ஏஐடியுசி சம்மேளன மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன், தெரு வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் சுதா, கல்யாணி, பாலமுருகன், மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.