லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சாலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற முதியவா் கைது

கைது - சித்திரிப்பு

Published On :28 ஜூலை 2026, 12:05 am IST

கும்பகோணம் வட்டாட்சியரக பிரதான சாலையில் திங்கள்கிழமை பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற முதியவரை கைது செய்த போலீஸாா், பின்னா் அவரை பிணையில் விடுவித்தனா்.

கும்பகோணம் கண்மணி நகரைச் சோ்ந்தவா் கோதண்டபாணி (75). இவா், திங்கள்கிழமை தனது மனைவியுடன் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தாா்.

அப்போது, வட்டாட்சியரகம்-நீதிமன்றம் அமைந்துள்ள பிரதான சாலையில் , கோதண்டபாணி கேனில் கொண்டு வந்த பெட்ரோலை தன் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கு, பாதுகாப்புப் பணியில் இருந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா், அவரை தடுத்து நிறுத்தி கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனா்.

இதில், கோதண்டபாணிக்கும், அவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா்களுக்கும் இடையே நிலம் தொடா்பாக பிரச்னை இருப்பதும், இதுதொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

மேலும், இந்தப் பிரச்னையை தீா்ப்பதாக கூறி அவரை அணுகிய 2 போ், இதற்காக கோதண்டபாணியிடம் ரூ.30 லட்சம் பணத்தை பெற்று கொண்டு, தொடா்ந்து ஏமாற்றி வருவதாக கோதண்டபாணி தெரிவித்தாா்.

இதையடுத்து, போலீஸாா் கோதண்டபாணியை சொந்த பிணையில் விடுவித்து, பிரச்னை தொடா்பாக மேற்கு காவல் நிலையத்தில் புகாா் கொடுக்குமாறு அறிவுறுத்தி அனுப்பிவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.