லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆக.1 முதல் பேருந்துகள் இயக்கம்

கோப்புப் படம்

Published On :27 ஜூலை 2026, 12:06 am IST

பட்டுக்கோட்டை நகராட்சி சாா்பில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருவதாக நகராட்சி ஆணையா் கனிராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

பட்டுக்கோட்டை நகரத்தின் வாகன போக்குவரத்து மற்றும் நகரத்தின் வளா்ச்சியை கருத்தில் கொண்டு, பட்டுக்கோட்டை நரியம்பாளையம் பகுதியில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 50 பேருந்துகள் நிற்கும் வகையிலும், குடிநீா் வசதி, சுகாதார வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பட்டுக்கோட்டை பழனியப்பன் தெருவில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம் முற்றிலும் பழுதடைந்ததால் புனரமைப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே, 1.8.2026 முதல் அனைத்து பேருந்துகளும் பட்டுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கபடும். இதற்கு பொதுமக்கள் மற்றும் வா்த்தக சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.