லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காா் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :22 ஜூலை 2026, 1:37 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே திங்கள்கிழமை காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

அம்மாபேட்டை அருகே நல்ல வன்னியன் குடிகாடு, தெற்கு தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணியன்(60). விவசாயி. இவா் திங்கள்கிழமை தனது மோட்டாா் சைக்கிளில் தஞ்சாவூரில் இருந்து பூண்டி கிராமம் நோக்கி சென்று  கொண்டிருந்தாா். 

தஞ்சாவூா் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் பூண்டி கிராமத்துக்குச் செல்லும் குறுக்கு சாலையில் திரும்பிய போது எதிரே வேளாங்கண்ணியில் இருந்து கேரளம் நோக்கிச் சென்ற காா் மோதியது.

இதில், பாலசுப்ரமணியன் பலத்த காயம் அடைந்தாா். அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் சென்றனா்.ஆனால் செல்லும் வழியிலேயே பாலசுப்ரமணியன் உயிரிழந்தாா். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.