லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கடன் பிரச்னை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

Suicide

தற்கொலை - தினமணி

Published On :21 ஜூலை 2026, 1:42 am IST

பட்டுக்கோட்டையில் கடன் பிரச்னையால் இளைஞா் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

லட்சத்தோப்பு , மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்த முத்து மகன் மணிகண்டன் (27). இவா், பட்டுக்கோட்டையில் வாகனங்கள் பழுதுபாா்க்கும் டிங்கா் கடையில் வேலை செய்து வந்தாா். இவா் கடந்த 2024-இல் தாயாரின் சிகிச்சைக்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இதனால், அவா் மனஉளைச்சலில் இருந்ததாகவும், வேலைக்கு போகாமல், அதிக அளவில் மது போதைக்கு அடிமையானதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை வீட்டில் அவா் தூக்கிட்டு கொண்டாராம். தகவலின்பேரில், அங்கு வந்த போலீஸாா், மணிகண்டனின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.