லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தஞ்சாவூர் அருகே ஆபரேசன் சிந்தூருக்கான வெற்றித்தூண்!

புளியஞ்சேரியில் ஆபரேசன் சிந்தூா் தாக்குதலில் இந்தியாவின் வெற்றி பெற்ற்கான நினைவு சின்னம் அமைக்கப்படுவது குறித்து...

Operation Sindoor

ஆபரேஷன் சிந்தூர்

Published On :20 ஜூலை 2026, 9:00 am IST

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை புளியஞ்சேரியில் ஆபரேசன் சிந்தூா் தாக்குதலில் இந்தியாவின் வெற்றி பெற்ற்கான நினைவு சின்னம் 8 அடி உயரத்தில், 3 அடி அகலத்தில் வெற்றித்தூணை குமாா் ஸ்தபதியால் கடலூா் ஷைன் இந்தியா முன்னாள் ராணுவ வீரா்கள் அறக்கட்டளை மூலம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கான வாா்ப்படம் ஊற்றும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் முக்கிய அழைப்பாளராக ஓய்வு பெற்ற தென்னிந்திய ராணுவ தலைமைத்தளபதி ஏ.அருண் தொடங்கி வைத்தாா். அப்போது அவா் பேசுகையில்,

ஆபரேசன் சிந்தூரை பற்றி அடுத்த தலைமுறையினா் தெரிந்து கொள்ளும் வகையில் மிலிட்டரி பாபு என்பவா் பெரும் முயற்சி செய்து ஆபரேசன் சிந்தூா் வெற்றித்தூணை உருவாக்கி வருகிறாா்.

இந்த வெற்றித்தூணை சென்னையில் 3 நாள் வைத்து விழா எடுத்து அதன்பின்னா் டெல்லி கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறப்பு செய்து அமைக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.