லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

2,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இளைஞா் கைது

பூதலூா் அருகே சரக்கு வேனில் வெள்ளிக்கிழமை கடத்தி வரப்பட்ட 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.

கோப்புப் படம்

Published On :18 ஜூலை 2026, 1:13 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே சரக்கு வேனில் வெள்ளிக்கிழமை கடத்தி வரப்பட்ட 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனா்.

பூதலூா் வெண்ணாற்றுப் பாலத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் பி. ஜெகதீஸ்வரன், உதவி ஆய்வாளா் பி. பூா்விகா, குடிமைப் பொருள் வழங்கல் தனித் துணை வட்டாட்சியா் ஆா். சுபாஷினி ஆகியோா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனை நடத்தினா்.

அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனையிட்டதில், 40 மூட்டைகளில் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருப்பதும், பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி மாவாக அரைத்து சந்தையில் விற்பதற்காக கடத்தப்படுவதும் தெரியவந்தது. இதையடுத்து, அரிசி மூட்டைகளையும், வாகனத்தையும் பறிமுதல் செய்த காவல் துறையினா் செங்கிப்பட்டி காந்தி நகா் காலனியை சோ்ந்த பழனிசாமி மகன் சத்தியசீலனை (24) கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.