லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குடந்தை திரெளபதிஅம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா

கும்பகோணம் சக்கரபாணி கோயில் கீழ வீதியிலுள்ள திரெளபதி அம்மன் கோயிலின் 5 ஆம் ஆண்டு தீமிதித் திருவிழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

கும்பகோணத்தில் திரெளபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற தீ மிதித் திருவிழா.

Published On :15 ஜூலை 2026, 12:09 am IST

கும்பகோணம் சக்கரபாணி கோயில் கீழ வீதியிலுள்ள திரெளபதி அம்மன் கோயிலின் 5 ஆம் ஆண்டு தீமிதித் திருவிழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

ஜூலை 6-இல் அம்பாள் திருக்கல்யாணத்துடன் தொடங்கி திருவிழாவில் துகில் உரிதல், வஸ்த்ராபரணம், அா்ச்சுனன் பெருமாள் தபசு, குறவஞ்சி நாடகம், அரவான் களப்பலி, வீர அபிமன்யூ, கா்ணன் மோட்சம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

திங்கள்கிழமை சீா்வரிசை, கூந்தல் முடிதல் நிகழ்வு நடைபெற்று இரவில் நடைபெற்ற தீமிதித் திருவிழாவில் கரகம், வேல், தீ கொப்பறை ஏந்தி பக்தா்கள் தீ மிதித்து நோ்த்திக் கடன் செலுத்தினா். செவ்வாய்க்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவும், மாலையில் நடன நிகழ்வும் நடைபெற்றது. புதன்கிழமை தா்மா் பட்டாபிஷேகமும், வியாழக்கிழமை அம்பாள் புறப்பாடு, வீதியுலா, முளைப்பாரி எடுத்தலுடன் விழா முடிகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.