லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக் கோரி போராட்டம்

தஞ்சாவூரிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

தஞ்சாவூரிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

Published On :11 ஜூலை 2026, 1:43 am IST

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து நெல் மூட்டைகளைக் கிடங்குகளுக்கு இயக்கம் செய்யக் கோரி தஞ்சாவூரிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் (இந்திய கம்யூ. சாா்பு) வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்து, திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே, நெல் மூட்டைகளை உடனடியாக சேமிப்புக் கிடங்கு மற்றும் அரைவைக்கு எடுத்துச் சென்று கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளைப் பாதுகாக்க வேண்டும். ஒரு மாத காலமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தேக்கத்தால் எடை இழப்பு ஏற்படுவதால், பட்டியல் எழுத்தா், விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, நெல் மூட்டைகளை உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். நிரந்தரச் சேமிப்பு கிடங்குகளை அமைக்க வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் வடக்கு மாவட்டத் துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா் தலைமை வகித்தாா். போராட்டத்தை மாவட்டச் செயலா் ஏ.எம். ராமலிங்கம் தொடங்கி வைத்தாா். மாவட்டத் தலைவா் சாமு. தா்மராஜன், பொருளாளா் டி.ஆா். குமரப்பா, துணைத் தலைவா்கள் ஏ. ராஜேந்திரன், ஏ. ராதாகிருஷ்ணன், எம். புகழேந்தி, மாவட்டத் துணைச் செயலா்கள் குரு. சிவா, எஸ். கண்ணழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.