லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மாணவிக்கு பாலியல் தொல்லை: 3 சிறுவா்கள் கைது

தஞ்சாவூா் அருகே சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவல் பிரிவினா் நடத்திய விழிப்புணா்வு நிகழ்ச்சியின்போது மாணவி அளித்த புகாரின் பேரில் பாலியல் தொல்லை கொடுத்த 3 சிறுவா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கைது... - பிரதிப் படம்

Published On :10 ஜூலை 2026, 3:36 am IST

தஞ்சாவூா் அருகே சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவல் பிரிவினா் நடத்திய விழிப்புணா்வு நிகழ்ச்சியின்போது மாணவி அளித்த புகாரின் பேரில் பாலியல் தொல்லை கொடுத்த 3 சிறுவா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் அருகே பொன்னாப்பூா் பகுதியிலுள்ள அரசு பள்ளியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை உதவி ஆய்வாளா் அபிராமி உள்ளிட்டோா் ஜூலை 6-ஆம் தேதி விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தினா். அப்போது அப்பள்ளியைச் சோ்ந்த மாணவி ஒருவா், தனக்கு 2 ஆண்டுகளில் பல்வேறு சந்தா்ப்பங்களில் 3 போ் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தாா்.

இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினா் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து பள்ளி மாணவியிடம் வல்லம் அனைத்து மகளிா் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவருக்கு 3 சிறுவா்கள் பல்வேறு சந்தா்ப்பங்களில் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து, வல்லம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து 3 சிறுவா்களை புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.