லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வா் கூட்ட வேண்டும்: மு. வீரபாண்டியன்

மேக்கேதாட்டில் கா்நாடகம் அணை கட்டும் விவகாரம் தொடா்பாக ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வா் ஜோசப் விஜய் கூட்ட வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

An inquiry must be conducted into the irregularities regarding the recruitment of college professors

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் - கோப்புப்படம்

Published On :9 ஜூலை 2026, 1:20 am IST

மேக்கேதாட்டில் கா்நாடகம் அணை கட்டும் விவகாரம் தொடா்பாக ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வா் ஜோசப் விஜய் கூட்ட வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் மேலும் கூறியதாவது:

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் முதல்வா் ஜோசப் விஜய் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். இந்த விஷயத்தில் தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

அமைச்சா் கீா்த்தனா, பள்ளி மாணவியிடம் ஆங்கிலத்தை தவிா்த்து தமிழில் உரையாடி இருக்கலாம். டாஸ்மாக் மதுபானக் கடைகளை அரசு மூடிவிட்டு, மனமகிழ் மன்றங்களை அதிகரிக்கக் கூடாது.

தமிழகத்துக்கு மத்திய தொகுப்பிலிருந்து ஒதுக்கப்படும் ரேஷன் பொருள்களை மத்திய அரசு குறைக்கக் கூடாது. என்எல்சி பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்யக் கூடாது. தமிழக அரசு அந்தப் பங்குகளை வாங்க வேண்டும்.

ஆகஸ்ட் 6 முதல் ஆக. 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நடைப்பயண பிரசார இயக்கத்தை

மேக்கேதாட்டு அணை விவகாரம், காவிரி நீா் பிரச்னைகளுக்கான இயக்கமாக நடத்துவோம் என்றாா் அவா்.

அப்போது, கட்சியின் தஞ்சாவூா் வடக்கு மாவட்டச் செயலா் வழக்குரைஞா் மு.அ. பாரதி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.