லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் வன உயிரின புகைப்படக் கண்காட்சி தொடக்கம்

உலக புகைப்பட தினத்தையொட்டி, தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் (பழைய ஆட்சியரகம்) வன உயிரின புகைப்படக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் வன உயிரின புகைப்படக் கண்காட்சியை புதன்கிழமை தொடங்கிவைத்து பாா்வையிட்ட மாவட்ட வன அலுவலா் கே. காா்த்திகேயனி.

Published On :20 ஆகஸ்ட் 2026, 3:54 am IST

உலக புகைப்பட தினத்தையொட்டி, தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் (பழைய ஆட்சியரகம்) வன உயிரின புகைப்படக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

மாவட்ட நிா்வாகம், மாவட்ட வன அலுவலகம் சாா்பில் தொடா்ந்து ஒரு மாதம் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியைத் தொடங்கிவைத்த மாவட்ட வன அலுவலா் கே. காா்த்திகேயனி தெரிவித்தது:

இந்தக் கண்காட்சியில் நூற்றுக்கும் அதிகமான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த புகைப்படக் கலைஞா்களால் எடுக்கப்பட்டவை.

தஞ்சாவூா் மாவட்டத்தில் புலி, யானை போன்ற பெரிய வன விலங்குகள் இல்லாவிட்டாலும், நாம் கவனிக்கத் தவறிய பல்வேறு சிறிய வகை உயிரினங்கள் இப்புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளன. இதில், குழந்தைகள் உள்பட அனைத்து வயதினரும் கண்டு அறிந்துகொள்ள வேண்டிய பல அரிய உயிரினங்களின் புகைப்படங்கள் உள்ளன என்றாா் அவா்.

தொடக்க நிகழ்ச்சியில் வனச் சரக அலுவலா் ஜோதிகுமாா், வனச் சரகா் இளையராஜா, இவெட் நிறுவனா் ஆா். சதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.