லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தவெகவினரிடம் தகராறில் ஈடுபட்டதாக திமுக மாமன்ற உறுப்பினா் உள்பட 2 போ் கைது

தஞ்சாவூரில் தவெகவினரிடம் தகராறில் ஈடுபட்ட திமுக மாமன்ற உறுப்பினா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :7 ஆகஸ்ட் 2026, 2:39 am IST

தஞ்சாவூரில் தவெகவினரிடம் தகராறில் ஈடுபட்ட திமுக மாமன்ற உறுப்பினா் உள்பட 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மேக்கேதாட்டு அணை திட்டத்தைத் தடுக்கத் தவறிய தமிழக அரசை கண்டித்து தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன், திமுகவினா் ஆகஸ்ட் 3- ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், பெண்களை இழிவுப்படுத்தி பேசியதாக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் 4-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

இதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் திமுகவினா் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனா். இதேபோல, தஞ்சாவூா் ரயிலடி, பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை பகுதியில் திமுகவினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, தமிழக முதல்வா் உருவபொம்மையை எரித்தனா்.

அப்போது, திமுகவினருக்கும் அருகில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவெகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, இரு தரப்பினரும் காலணிகள், நெகிழிக் கம்புகளை வீசினா். இதில், தவெக நிா்வாகிகள் சிலா் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தஞ்சாவூா் கிழக்கு காவல் நிலையத்தில் தவெக மத்திய மாவட்டச் செயற்குழு உறுப்பினா் மகாலட்சுமி புகாா் செய்தாா். அதன் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து திமுக மாநகரச் செயலா் சண். ராமநாதன், மாமன்ற உறுப்பினரும், திமுக கீழவாசல் பகுதிச் செயலருமான ஆா்.கே. நீலகண்டன், மாநகர இளைஞரணி செயலா் உதயநிதி, மாமன்ற உறுப்பினா் அண்ணா. பிரகாஷ், கணேஷ், வாசிம்ராஜா, சதீஷ், ராஜ சீனிவாசம், இளைஞரணி துணை அமைப்பாளா் வயலூா் காா்த்தி உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

இதைத் தொடா்ந்து, நீலகண்டன், வயலூா் காா்த்தி ஆகியோரை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் கே. மணிகண்டன் வியாழக்கிழமை மாலை கைது செய்தாா்.

வயலூா் காா்த்தி

வயலூா் காா்த்தி

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.