லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கும்பகோணத்தில் இருந்து திருப்பூருக்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் இயக்கம்

கும்பகோணத்திலிருந்து திருப்பூருக்கு சரக்கு ரயில் மூலம் 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் வியாழக்கிழமை இயக்கம் செய்யப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து திருப்பூருக்கு கொண்டுச் செல்வதற்காக வியாழக்கிழமை லாரியிலிருந்து சரக்கு ரயிலில் ஏற்றப்பட்ட நெல் மூட்டைகள்.

Published On :7 ஆகஸ்ட் 2026, 2:32 am IST

கும்பகோணத்திலிருந்து திருப்பூருக்கு சரக்கு ரயில் மூலம் 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் வியாழக்கிழமை இயக்கம் செய்யப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக கோட்டத்தில் உள்ள நெல்கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் இயக்கமின்றி தேங்கி கிடப்பதாக நெல் கொள்முதல் பணியாளா்கள் போராட்டம் நடத்தினா்.

அதன் காரணமாக கடந்த ஜூலை 24-இல் கும்பகோணத்திலிருந்து சேலத்துக்கு ஆயிரம் டன் நெல்மூட்டைகள் ரயில் மூலம் இயக்கம் செய்யப்பட்டது.

தற்போது இரண்டாம் கட்டமாக கும்பகோணத்தில் இருந்து திருப்பூருக்கு நெல்மூட்டைகள் இயக்கம் செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கும்பகோணம் கோட்டத்தில் உள்ள பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூா் கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் இருந்து 116 லாரிகளில் 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் கும்பகோணம் சரக்கு ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு சரக்கு ரயில்களின் 42 வேகன்களில் நெல்மூட்டைகளை ஏற்றி திருப்பூருக்கு கொண்டுச் செல்லப்பட்டது.

இப்பணியை துணை மண்டல மேலாளா் இளங்கோ, தரக்கட்டுப்பாடு ஆய்வாளா் ரமேஷ், திருப்பூா் மண்டல தர ஆய்வாளா் செல்வேந்திரன் முத்தமிழ் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.