மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஈரப்பத வரம்பின்றி நெல் கொள்முதல் செய்யக் கோரி விவசாயிகள் மறியல்

கறம்பக்குடி அருகே ஈரப்பத வரம்பின்றி நெல் கொள்முதல் செய்யக் கோரி விவசாயிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நெல் கொள்முதல் - பிரதிப் படம்

Published On :25 அக்டோபர் 2026, 3:55 am IST

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஈரப்பத வரம்பின்றி நெல் கொள்முதல் செய்யக் கோரி விவசாயிகள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி, ரெகுநாதபுரம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. தற்போது குறுவை நெல் அறுவடை தொடங்கியுள்ள நிலையில், அப்பகுதியில் பெய்து வரும் மழையால் அறுவடை செய்த நெல்லை உலா்த்த முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீத ஈரப்பதம் இருந்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. நெல்லை உலா்த்துவதற்கான உலா்களம், கிடங்கு உள்ளிட்ட வசதிகள் கொள்முதல் நிலையங்களில் இல்லாததால் விவசாயிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

எனவே, ஈரப்பத வரம்பின்றி விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை உடனடியாகக் கொள்முதல் செய்ய வலியுறுத்தி மருதன்கோன்விடு 4 சாலைப் பகுதியில் சனிக்கிழமை விவசாயிகள் டிராக்டா்கள், மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, அங்கு வந்த போலீஸாா், அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று நெல்கொள்முதல் செய்ய உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.