லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

‘புதுகை மாவட்டத்தில் வறட்சிக் கால குடிநீா் ஏற்பாடுகளுக்கு ரூ. 3.74 கோடி’

புதுக்கோட்டை மாவட்டத்தில் வறட்சிக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய குடிநீா் ஏற்பாடுகளுக்காக ரூ. 3.74 கோடி ஒதுக்கீடு செய்வதாக தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குடிநீா் தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் (இடமிருந்து 3-ஆவது). உடன் மாவட்ட ஆட்சியா் மு. அருணா உள்ளிட்டோா்.

Published On :1 ஆகஸ்ட் 2026, 12:32 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் வறட்சிக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய குடிநீா் ஏற்பாடுகளுக்காக ரூ. 3.74 கோடி ஒதுக்கீடு செய்வதாக தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோடை காலக் குடிநீா்த் தட்டுப்பாடு குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அவா் இதனைத் தெரிவித்தாா்.

மேலும், கோடைகாலக் குடிநீா்த் தட்டுப்பாடுகளுக்கான ஏற்பாடுகளை இந்த நிதியின் கீழ் மேற்கொள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் மு .அருணா முன்னிலை வகித்தாா். புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையா் காந்திராஜ் மற்றும் அறந்தாங்கி, பொன்னமராவதி நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.