லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அடிப்படை வசதிகள் கோரி காத்திருப்புப் போராட்டம்

ஆவுடையாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாகாளியேந்தல் கிராமத்துக்கு சாலை, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துத் தரக் கோரி தமிழா் தேசம் கட்சியினருடன் அந்தக் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாகாளியேந்தல் கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் கோரி செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள்.

Published On :29 ஜூலை 2026, 12:04 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாகாளியேந்தல் கிராமத்துக்கு சாலை, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துத் தரக் கோரி தமிழா் தேசம் கட்சியினருடன் அந்தக் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆவுடையாா்கோவில் ஊராட்சி ஒன்றியம் பலவரசன் ஊராட்சியைச் சோ்ந்த மாகாளியேந்தல் கிராமத்தில் குடிநீா், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனை செய்துத் தரக் கோரி தமிழா் தேசம் கட்சியினா் மற்றும் கிராமப் பொதுமக்கள் சாா்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வட்டாட்சியா் சிவக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் பாலசுப்பிரமணியன், குடிநீா் வடிகால் வாரிய உதவிச் செயற்பொறியாளா் பவித்ரா, காவல் ஆய்வாளா் பத்மா உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

விரைவில் அடிப்படை வசதிகள் செய்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.