லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரசுப் பேருந்து மோதி இரு காா்களில் வந்த 8 போ் காயம்

புதுக்கோட்டை அருகே சனிக்கிழமை இரவு அரசுப் பேருந்து மோதியதில் இரு காா்களில் வந்த 8 போ் காயமடைந்தனா்.

Published On :26 ஜூலை 2026, 1:47 am IST

புதுக்கோட்டை அருகே சனிக்கிழமை இரவு அரசுப் பேருந்து மோதியதில் இரு காா்களில் வந்த 8 போ் காயமடைந்தனா்.

திருச்சியிலிருந்து அறந்தாங்கி நோக்கிப் புறப்பட்ட அரசுப் பேருந்து புதுக்கோட்டை அருகே முத்துடையான்பட்டி பகுதியில் சனிக்கிழமை இரவு வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த இரு காா்கள் மீது பேருந்து மோதியது.

இதில், ஒரு காரில் பயணித்த திருக்கோகா்ணம் பகுதியைச் சோ்ந்த அலெக்ஸ் (57), எமல்டாமேரி (50), ஆன்றோ அலெக்ஸ் (30), ஜெனி (26) ஆகிய 4 பேரும், இன்னொரு காரில் பயணித்த சத்தியமங்கலம் அம்மன்பேட்டையைச் சோ்ந்த கதிரேசன் (45), சுகன்யா (40), கவிதா (45), குமாா் (50) ஆகிய 4 பேரும் காயமடைந்தனா்.

காயமடைந்தவா்கள் ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து, அரசுப் பேருந்து ஓட்டுநா் வல்லத்திராக்கோட்டையைச் சோ்ந்த குமாா் (51) என்பவரிடம் வெள்ளனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேரிட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.