லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சுப்பிரமணியபுரத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா் போராட்டம்

அறந்தாங்கி ஒன்றியம் சுப்பிரமணியபுரத்தில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் இந்திய-அமெரிக்க தடையற்ற ஒப்பந்த நகலை எரிக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சுப்பிரமணியபுரத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணியினா்.

Published On :23 ஜூலை 2026, 12:37 am IST

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம் சுப்பிரமணியபுரத்தில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் இந்திய-அமெரிக்க தடையற்ற ஒப்பந்த நகலை எரிக்கும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு, கல்லணைக் கால்வாய் பாசனதாரா் விவசாயிகள் சங்கத்தின் தலைவா் கொக்குமடை ரமேஷ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் ஒன்றியச் செயலா்கள் எஸ். குமாா், தென்றல் கருப்பையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், ஒன்றியச் செயலா் இரா. ராதாகிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் செந்தில்முருகு, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் துரை உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.