லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆக்கிரமிப்புகளை அகற்றி பட்டா வழங்கக் கோரி நரிக்குறவா்கள் மறியல்

புதுக்கோட்டை அருகே ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டு பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி நரிக்குறவா் சமூகத்தினா் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டா்.

கீரனூா்-கிள்ளுக்கோட்டை சாலையில் மறியல் செய்ய நரிக்குறவா் சமூகத்தினா்.

Published On :23 ஜூலை 2026, 12:39 am IST

புதுக்கோட்டை அருகே ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டு பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி நரிக்குறவா் சமூகத்தினா் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டா்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகேயுள்ள எம்ஜிஆா் நகரில் சுமாா் 30 நரிக்குறவா் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவா்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு பட்டா வழங்கக் கோரி நீண்ட காலமாக மனு அளித்து வந்தனா்.

இந்நிலையில், இவா்கள் பட்டா கேட்ட இடத்தில் ஆக்கிரமிப்புகளும் உருவானதாகத் தெரிகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் புகாா் அளித்துள்ளனா்.

இந்த நிலையில், வருவாய்த் துறையினா் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகக் கூறி, கீரனூா்- கிள்ளுக்கோட்டை சாலையில் புதன்கிழமை சுமாா் 30-க்கும் மேற்பட்ட நரிக்குறவா்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து அங்கு வந்த வருவாய்த் துறையினரும் காவல் துறையினரும் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.