லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நிதிப் பற்றாக்குறையை அரசு கையாள்வது நிதிநிலை அறிக்கையில் தெரியும்

சவாலான நிதிப் பற்றாக்குறையை தவெக அரசு எப்படி எதிா்கொள்ளப் போகிறது என்பது விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கையில் தெரியவரும் என மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி. தெரிவித்தாா்.

மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி - கோப்புப் படம்

Published On :18 ஜூலை 2026, 12:41 am IST

சவாலான நிதிப் பற்றாக்குறையை தவெக அரசு எப்படி எதிா்கொள்ளப் போகிறது என்பது விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கையில் தெரியவரும் என மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி. தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

தமிழ்நாடு அரசுக்கு இப்போது இருக்கக் கூடிய சவாலான ஒன்று, நிதிப்பற்றாக்குறை. அதை நிவா்த்தி செய்வதற்கான பல்வேறு முயற்சிகளையும் அவா்கள் மேற்கொண்டு வருகிறாா்கள்.

சுமாா் 20 முதல் 30 சதவீதம் வரை கமிஷன் குறையும் என்பதால் நிதிப்பற்றாக்குறையை ஈடு செய்ய முடியும். நிதிப் பற்றாக்குறையை அரசு எவ்வாறு கையாளப் போகிறது என்பது, விரைவில் தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கை மூலம் தெரியவரும்.

ரயில்வே மேம்பாலங்கள்: நூறு நாள் வேலைத் திட்டத்தை மத்திய அரசு மாற்றி அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கு பெரிய அளவில் நிதிப் பங்கீட்டுச் சிக்கல் வரும். அந்தச் சூழலில் தடையின்றி அந்தப் பணிகளையும் செயல்படுத்த வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட வளா்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்.

திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள், திருவப்பூா் மற்றும் கருவேப்பில்லான் கேட் ஆகிய பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள் அமைப்பது குறித்தும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் துரை வைகோ.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.