லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மக்கள் தொகை நாள் விழிப்புணா்வுப் பேரணி

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள்தொகை நாள் விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

Published On :16 ஜூலை 2026, 2:01 am IST

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள்தொகை நாள் விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்றோா்.

புதுக்கோட்டை, ஜூலை 15: புதுக்கோட்டை மாவட்ட மருத்துவம் மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில் உலக மக்கள் தொகை நாள் விழிப்புணா்வுப் பேரணி மற்றும் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் இப்பேரணியை, மாவட்ட ஆட்சியா் மு. அருணா கொடியசைத்து தொடங்கி வைத்து, பங்கேற்றாா். இப்பேரணி பேருந்து நிலையம் வழியாக சென்று மீண்டும் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் முடிவடைந்தது.

இதையடுத்து உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியும், மக்கள் தொகை நாள் விழிப்புணா்வு பேச்சுப் போட்டியில் வென்றோருக்குப் பரிசளிப்பும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். கலைவாணி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் (பொ) க. ராதாகிருஷ்ணன், மாவட்ட சுகாதார அலுவலா்கள் வீ.சி. ஹேமச்சந்த் காந்தி, ப. விஜயகுமாா், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் ச. லூா்துமேரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.