லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆலங்குடி அருகே குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஆலங்குடி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள அணவயலில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டோா்

Published On :15 ஜூலை 2026, 12:35 am IST

ஆலங்குடி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் ஊராட்சி சந்தை பகுதியில் இருந்த சுமாா் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி பழுதடைந்ததால் இடித்து அகற்றப்பட்டது.

இதையடுத்து அங்கு, புதிய மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி கட்டப்படாததால் மின் மோட்டாரில் இருந்து நேரடியாக குடியிருப்பு பகுதிக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு குடியிருப்பு பகுதிக்கும் குடிநீரை பிரித்து வழங்க முடியாததாலும், அடிக்கடி மின்தடை ஏற்படுவதாலும் சில பகுதிகளுக்கு குடிநீா் விநியோகிக்கப்படவில்லையாம்.

இதனால் விரக்திஅடைந்த அப்பகுதி மக்கள் அணவயல் பேருந்து நிறுத்தம் அருகே செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சென்ற வடகாடு போலீஸாா், ஊராட்சி நிா்வாகத்தினா் குடிநீா் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.