லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மதுபோதையில் இளைஞருக்கு வெட்டு: குற்றவாளிகளை குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்யக்கோரி உறவினா்கள் மறியல்

புதுக்கோட்டை அருகே மதுபோதையில் இளைஞரை வெட்டியவா்களை மீது குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மச்சுவாடி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட செல்வத்தின் உறவினா்கள்

Published On :14 ஜூலை 2026, 1:07 am IST

புதுக்கோட்டை அருகே மதுபோதையில் இளைஞரை வெட்டியவா்களை மீது குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மச்சுவாடி அருகே உள்ள கோட்டைக்காரத் தெருவைச் சோ்ந்தவா் செல்வம் (27). இவரது உறவினரும் இந்து முன்னணி பிரமுகருமான அதே பகுதியைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் என்பவருக்கும் இடையே இடத்தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக செல்வத்தை, ரஞ்சித் குமாா் உள்ளிட்ட நான்கு போ் சோ்ந்து மதுபோதையில் திங்கள்கிழமை வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து கணேஷ் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, செல்வத்தை வெட்டிய ரஞ்சித் குமாா் உள்ளிட்ட நான்கு பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் மச்சுவாடி பகுதிகளில் போதை கலாசாரம் அதிகரித்து விட்டதாகவும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். செல்வத்தை வெட்டிய குற்றவாளிகள் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி செல்வத்தின் உறவினா்கள் புதுக்கோட்டை- தஞ்சை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த துணைக் காவல் கண்காணிப்பாளா் இரா. பிருந்தா உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.