லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: விராலிமலை வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் விராலிமலை வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

விராலிமலை சமூக நீதி விடுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் மு.அருணா.

Published On :20 ஆகஸ்ட் 2026, 4:02 am IST

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தின் கீழ் விராலிமலை வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பகவான் பட்டி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சியா், காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். மேலும், மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.

தொடா்ந்து நீா் பழனி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பொது விநியோக அங்காடி, அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.

இதையடுத்து கிராம நிா்வாக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், வருவாய் துறையின் சாா்பில் இணைய வழியாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் தொடா்பான பதிவேடுகளை ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, ஆவூா் ஊராட்சியில் கால்நடை மருந்தகம், விராலிமலையில் உள்ள சமூகநீதி விடுதியில் ஆய்வு மேற்கொண்டாா்.

பிறகு, அனைத்துத் துறை சாா்ந்த முதல்நிலை அலுவலா்கள் மேற்கொண்ட கள ஆய்வு பணிகளின் அடிப்படையில் விராலிமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. தொடா்ந்து ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அரசுப் பணிகள், மக்களுக்கான நலத்திட்டங்கள், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் புதிய தேவைகள் மற்றும் வளா்ச்சிப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் குழந்தைசாமி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் வடிவேலு பிரபு (தேசிய நெடுஞ்சாலை), வைத்தியநாதன்(காவிரி-குண்டாறு இணைப்பு), மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் லோக நாயகி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் சித்ரா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் வேத லட்சுமி, இலுப்பூா் வருவாய் கோட்டாட்சியா் கோகுல் சிங், வட்டார வளா்ச்சி அலுவலா் வேலு, வட்டாட்சியா்கள் ஜெயபாரதி, சதீஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.