தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

புதுநகா் அரசு மருத்துவமனை முன்பு கொட்டபடும் மருத்துவ கழிவுகள்

கந்தா்வகோட்டை அருகே அரசு மருத்துவமனை முன்பாக கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

புதுநகா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு கொட்டிக்கிடக்கும் மருத்துவக் கழிவுகள்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 12:03 am IST

கந்தா்வகோட்டை அருகே அரசு மருத்துவமனை முன்பாக கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுநகா் ஊராட்சியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு கா்பிணிகளும், குழந்தைகளுடன் தாய்மாா்களும், சிறியவா் முதல் பெரியவா்கள் என பல்வேறு தரப்பினரும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனா்.

இந் நிலையில், மருத்துவமனை முன்பு மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

எனவே, இந்த கழிவுகளை அகற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தபட்ட துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.