லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சாலையில் திரிந்த 34 மாடுகளின் உரிமையாளா்களுக்கு அபராதம்

புதுக்கோட்டை மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சனிக்கிழமை சாலையில் திரிந்த 34 மாடுகளை பிடித்து அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Published On :16 ஆகஸ்ட் 2026, 2:32 am IST

புதுக்கோட்டை மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக சனிக்கிழமை சாலையில் திரிந்த 34 மாடுகளை பிடித்து அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாநகரின் பல பகுதிகளில் ஏராளமான மாடுகள் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரிந்து வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், வடக்கு ராஜவீதி, கிழக்கு ராஜவீதி, திலகா்திடல், பால்பண்ணை, அண்ணா சிலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு மாநகராட்சி சுகாதார அலுவலா் பாஸ்கரன் தலைமையிலான குழுவினா் மாடுகளைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனா்.

மாநகா் முழுவதும் 34 மாடுகள் பிடிக்கப்பட்டு நகா்மன்ற வளாகத்தில் அடைக்கப்பட்டன. இந்த மாடுகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதமும், நாளொன்றுக்குப் பராமரிப்புச் செலவுக்காக ரூ. 300 வீதம் வசூலிக்க மாநகராட்சி ஆணையா் காந்திராஜ் உத்தரவிட்டுள்ளாா்.

திரும்பத் திரும்ப பிடிபடும் மாடுகளை பொது ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.