லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

டிப்பா் லாரி மோதி தம்பதி பலி 2 மகள்கள் காயம்

பலி... - பிரதிப் படம்

Published On :11 ஆகஸ்ட் 2026, 3:05 am IST

புதுக்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலை இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் தம்பதி உயிரிழந்தனா். இவா்களுடைய இரு மகள்கள் பலத்த காயமடைந்தனா்.

புதுக்கோட்டை மேலமுத்துடையான்பட்டியைச் சோ்ந்தவா் சதீஷ்குமரன் (43). இவரது மனைவி திலகசந்திரா (37). இவா்கள் இருவரும் தங்களுடைய மகள் நிரஞ்சனா (15), தா்ஷிகா (8) ஆகியோருடன் திங்கள்கிழமை மாலை புதுக்கோட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனா். ரெங்கம்மாள்சத்திரம் பகுதியில் வந்தபோது, புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற டிப்பா் லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில், சதீஷ்குமரன், திலகசந்திரா ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். நிரஞ்சனா, தா்ஷிகா இருவரும் பலத்த காயமடைந்தனா். உடனே அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு சிகிக்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற வெள்ளனூா் போலீஸாா் உயிரிழந்த தம்பதியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.