லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கொப்பனாபட்டியில் இந்திய கம்யூ. கட்சியின் நடைப்பயண பிரசாரம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Published On :9 ஆகஸ்ட் 2026, 1:08 am IST

பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நடைப்பயண பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த பிரசாரத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் ஏனாதி ஏஎல்.ராசு தலைமை வகித்தாா். மாவட்டக்குழு உறுப்பினா் என்.ஆா்.ஜீவானந்தம் தொடங்கி வைத்தாா்.

கொப்பனாபட்டி ஊராட்சிக்குள்பட்ட முக்கிய வீதிகளில் நடைபெற்ற பிரசாரத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட உரிமையை பறிக்ககூடாது. பெட்ரோல், டீசல் மற்றும் அனைத்து அத்தியாவசிய பொருள்கள் விலையேற்றத்தை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதில், சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவா் டிஆா்.ரெங்கையா, ஒன்றிய துணைச் செயலா் கரு.பஞ்சவா்ணம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.