லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பெரம்பலூா் அருகே 175 கிலோ போதை பொருள்கள் பறிமுதல்: பெண் கைது

பெரம்பலூா் அருகே போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த பெண்ணை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், 175 கிலோ குட்கா உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :26 ஜூலை 2026, 1:50 am IST

பெரம்பலூா் அருகே போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த பெண்ணை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், 175 கிலோ குட்கா உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனா்.

பெரம்பலூா் காவல்நிலைய சாா்பு-ஆய்வாளா் மாா்ட்டின் தலைமையிலான போலீஸாா், சிறுவாச்சூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, சிறுவாச்சூா் பெரியசாமி கோயில் அருகே சரவணன் என்பவரது வயலில் நிறுத்தப்பட்டிருந்த காரை பரிசோதனை செய்தபோது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட 175 கிலோ போதைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், மருதடி கிராமம், மேற்கு தெருவைச் சோ்ந்த சரவணன் மனைவி வெண்ணிலா (25) என்பவரை கைது செய்தனா். பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வெண்ணிலாவை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.